×

முதல்வர் பதவி எனக்கு வேண்டாம் - ரஜினி அதிரடி பேச்சு
 

ஆன்மிக அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது தொடங்கப்படாத கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசி வந்தார். சமீபத்தில் கூட 2 முறை சந்தித்து உரையாடினார்.
 

இதற்கிடையில் முதல் அமைச்சர் பதவியில் தான் அமரப்போவதில்லை எனவும், வேறு நபரை அப்பதவியில் அமர்ந்து வைக்க அவர் விரும்புவதாகவும், இதை மாவட்ட செயலாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதை மாவட்ட செயாலாளர்கள் விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளிவந்தது.

இப்படிப்பட்ட பரபரப்பான நிலையில், ரஜினி இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அரசியலுக்கு வருவதாய் எப்போதும் கூறவில்லை. ஆண்டவன் கையில் என்றே கூறி வந்தேன். அரசியலை கவனித்து வந்தேன்...

2017ல் ஜெயலலிதா மறைந்தார். தமிழக அரசியலில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் போனது. எனவே, என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்காக ஜெ.வின் மறைவுக்கு பின் அரசியலுக்கு வருவதாய் அறிவித்தேன்.எனக்கு அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள் உள்ளது.

எல்லாவற்றிலும் ஊழல்.. கட்சி பதவியை தொழிலாக வைத்துள்ளனர். பதவியில் இருந்தவர்களே மீண்டும் அப்பதவிக்கு வருகின்றனர். அதில் எனக்கு விருப்பமில்லை.

65 சதவீதம் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தேர்ந்தெடுப்பேன். திறமையான இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ பதவி அளிப்பேன்.. 35 சதவீதம் 50 வயதுக்கு மேல் நல்லவர்கள்,அனுபவம் உள்ளவர்கள், நேர்மையானார்களை என்னுடன் சேர்த்துகொண்டு மாற்று அரசியலை உருவாக்குவேன். 

திட்டம் - 1தேவையான அளவு மட்டுமே கட்சி நிர்வாகிகள்...

திட்டம் 2 - இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ பதவி...

திட்டம் 3 - கட்சிக்கு ஒரு தலைமை... ஆட்சிக்கு ஒரு தலைமை...

அவர்களுக்கு இந்த ரஜினிகந்த் பாலமாக இருப்பேன்...எனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை... எனக்கு அது ரத்தத்திலேயே இல்லை.. இளைஞரை, நேர்மையானவரை அமர வைக்க வேண்டும்... நல்லவரை முதல்வர் ஆக்குவோம்.. 

கட்சிக்கு மட்டுமே நான் தலைவன்... முதல்வர் பதவி வேண்டாம்...இதுவே என் திட்டம்

1996ல் கூட முதல்வராகும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதை நான் ஏற்கவில்லை..

இதை மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தான்  ஏமாற்றம் எனக்கூறினேன். ஆனால், அரசியலில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. எனக்கு பதவியில் ஆர்வம் இல்லை. எனவே, என் திட்டத்தை மக்களிடம் கூற முடிவெடுத்தேன். 2021ம் ஆண்டில் மாற்றம் ஏற்பட வேண்டும்... இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை வர வேண்டும். பல வருடங்களாக ஆட்சியில் இருக்கும் கட்சிகளை தூக்கி ஏறிய வேண்டும்..

என அவர் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News