Categories: Cinema News latest news

ஏங்கடா! லட்டு மாதிரி அஜித்-விஜய் படங்கள் கிடைச்சா மிஸ் பண்ணுவேனா? ஷாக் கொடுத்த சாய் பல்லவி!..

Sai Pallavi: நடிகை சாய் பல்லவி தனக்கு கிடைத்த அஜித் மற்றும் விஜய் படங்களை வேண்டாம் என கூறியதாக ஒரு தகவல் உலா வரும் நிலையில் அதற்கு பதிலடியாக விளக்கம் கொடுத்து இருக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மலையாளத்தில் மாஸ்ஹிட் கொடுத்த திரைப்படம் பிரேமம். இப்படத்தில் மலர் வேடத்தில் சாய் பல்லவி நடித்திருப்பார். மேக்கப் இல்லாத முகம், சிம்பிளான லுக்கில் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் அசரடித்தார். இருந்தும் தொடர்ச்சியாக அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..

ஆனால் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்  சாய் பல்லவி நடித்து வருகிறார். பிடா, சியாம் சிங்கராய் உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இருந்தும் தமிழில் கார்கி, மாரி2 படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.

நல்ல படங்களில் நடித்தாலும் சாய் பல்லவிக்கு இதுவரை முன்னணி நாயகர்களான விஜய், அஜித் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தெலுங்கில் நாக சைதன்யா படத்திலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி  இருக்கும் அமரன் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: லட்சத்துக்கே நடிப்பை கொட்டுவாரு… இதுல கோடியா? கருடன் படத்தில் வைரலாகும் சூரியின் சம்பளம்…

ஆனால் இந்த பிரச்னைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை எந்த அஜித் மற்றும் விஜய் படங்களை நிராகரித்தது இல்லை. இது வதந்தி தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னராவது சாய் பல்லவி கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Shamily