×

இந்தி தெரியாது போடா… திருப்பூருக்கு வந்து குவியும் டி ஷர்ட் ஆர்டர்கள்!

கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆன இந்தி தெரியாது போடா என்ற வாசகம் உள்ள டி ஷர்ட்களுக்கான ஆர்டர்கள் அதிகமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆன இந்தி தெரியாது போடா என்ற வாசகம் உள்ள டி ஷர்ட்களுக்கான ஆர்டர்கள் அதிகமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தற்போது  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு செய்யப்படுவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. அதிலும் தமிழகத்தில் அந்த குரல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் எம் தமிழ் பேசும் இந்தியன் போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் இந்தி தெரியாது போடா என்ற  ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதால் இப்போது இந்த டிஷர்ட்க்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

டிஷர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள திருப்பூரில் இதுவரைக்கும் 15,000 ஆர்டர்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News