×

இந்தி மட்டுமா தெரியாது… ஸ்டாலினைக் கலாய்ச்சு மீம் போட்ட ஹெச் ராஜா!

ஞாயிற்றுக் கிழமை முதல் சமூகவலைதளங்களில் பரப்பப் படும் இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்கால் பாஜகவினர் கடுப்பாகியுள்ளனர்.
 

ஞாயிற்றுக் கிழமை முதல் சமூகவலைதளங்களில் பரப்பப் படும் இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்கால் பாஜகவினர் கடுப்பாகியுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவும் அவரது நண்பர் நடிகர் சிரிஷும் அணிந்திருந்த டி ஷர்ட்களால் இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆக தமிழகத்தில் அதை வெகுவாக ஏற்றுக்கொண்டு பரப்பினர். குறிப்பாக டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேஷ்டேக்கு திமுகவினர் ஆதரவு அளிக்க, திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கடுப்பான பாஜகவினர் திமுகவுக்கு எதிராக திமுக வேண்டாம் போடா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர்.

அதுபோல இப்போது ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக, ‘ஆக மேத்ஸ், பிசிக்ஸ், அறிவியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாது ‘ போடா என அவர் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர். இதை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘வர வர மக்கள் ரொம்ப கிரியேட்டிவ் ஆக யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்’ எனப் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News