×

கல்யாணம் ஆனதும் தெரியல... வயசு ஆனதும் தெரியல... அம்புட்டு அழகா இருக்கீங்க!

அழகு மாறா அழகி நடிகை பாவனாவின் சமீபத்திய போட்டோஸ்  

 

தமிழில் முதன் முதலில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவா் நடிகை பாவனா. அந்த படத்தை தொடா்ந்து தீபாவளி படத்தில் நடிகா் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், அசல் படத்தில் அஜித்துக்கும் ஜோடியாகவும், பின்பு ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவா் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.  தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் புகழ் பெற்ற நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இவா் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

அங்கும் தனது புகழ் என்னும் கொடியை பிடித்தார். பின் திடீரென சினிமாவை விட்டு எங்கு சென்றார் என்று அவரது ரசிகா்கள் விழி பிதுங்கி இருந்த போது அத்தி பூத்தாற் போல ஒரு மலையாள படத்தில் மின்னலென வந்து நடிக்க தொடங்கினார். இதற்கிடையில் பாலியல் ரீதியாக  சில பிரச்சனைகனை சந்தித்து அதிலிருந்து விடுபட்டு வந்தார்.

பின்னர் தனது நீண்ட நாள் காதலரை திருணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். தற்ப்போது 34 வயதாகும் பாவனா இப்போதும் அதே அழகு மாறாமல் எப்போவாவது  ரீசன்ட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றுவிடுகிறார். எத்தனை நடிகைகள் உருவாகினாலும் சின்ன வயசில் நாம் பார்த்து ரசித்த நடிகைகள் எப்போதும் நமக்கு பேவரைட் தான் என்பதற்கு பாவனாவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

From around the web

Trending Videos

Tamilnadu News