×

என்ன பத்தி தப்பா பேசாதிங்க எனக்கு பிடிக்காது!

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பளீச் கருத்தை பதிவிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. 

 

இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களிடையே பிரபலமனார். இவருக்காக லாஸ்லியா ஆர்மி எனும் பேஜ்கள் உருவாக்கப்பட்டன. இதை தொடர்ந்து இவர் தற்போது ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரென்ட்ஷிப், ஆரி அர்ஜுனா ஹீரோவாக நடிக்கும் படம், ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பளீச் கருத்தை பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''எல்லோருக்கும் வணக்கம், அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது என் இன்ஸ்டாகிராம் பக்கம். இதில் நான் பதிவிடும் கேப்ஷன்கள், போட்டோக்கள் அனைத்தும் என்னை பற்றிதான். என்னை பற்றி மட்டும்தான். எனக்கு பின்னால் பேசுவது பிடிக்காது. அப்படி ஏதாவது பேச வேண்டுமென்றால், நாம் இப்போது சந்தித்து வரும் சூழ்நிலை குறித்து பேசுங்கள்'' என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News