எனக்கு அந்த காரு வேணாம்!.. சூர்யாவிடம் அடம்பிடித்த ஆர்.ஜே.பாலாஜி!..

 
rj balaji

திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். ரேடியோ ஜாக்கியாக வேலை செய்ததாலோ என்னவோ எப்போதும் அதிகமாகவே பேசுவார் ஆர்.ஜே பாலாஜி. இது அவர் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்வதை பார்த்தாலே தெரியும்.

சூர்யாவை வைத்து கருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கினார் ஆர்.ஜே.பாலாஜி. சொன்ன பட்ஜெட்டை விட 40 கோடி அதிகமாக செலவு செய்து பணத்தை எடுத்தார். இதனால் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பல நாட்கள் பிரச்சனை வந்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தனது உறவினர் என்பதால் ஆர்.ஜே பாலாஜி மீது சூர்யாவும் அதிருப்தியில் இருந்திருக்கிறார்.

ஆனால் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக பொறுமையாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படி வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 340 கோடி வரை வசூல் செய்து விட்டது. 10 வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் கிடைத்திருக்கிறது. இதனால், மகிழ்ச்சியடைந்த சூர்யா இந்த படத்தில் பணிபுரிந்த எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகிய மூவருக்கும் 30 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.

ஆனால் முக்கியமான நபரான கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜிக்கு சூர்யா எந்த பரிசும் கொடுக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில்தான், ஆர்.ஜே பாலாஜிக்கு சூர்யா காரை கொடுக்காமல் இருந்தன் பின்னணி தற்போது தெரிய வந்திருக்கிறது..

சூர்யா நான்கு கார்களைத்தான் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் எனக்கு அந்த கார் பிடிக்கவில்லை என ஆர்.ஜே.பாலாஜி சொல்லிவிட்டாராம். அதோடு Toyoto Innova Hycross கார்தான் எனக்கு பிடிக்கும் என அவர் சொல்ல, அந்த காரையே சூர்யா அவருக்கு வாங்கி கொடுத்துவிட்டாராம். மற்றவர்கள் கொடுத்ததை விட இந்த கார் 10 லட்சம் அதிகம் என சொல்லப்படுகிறது.

Tags

From Around the web