Categories: Cinema News latest news

என்கிட்டயும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க! – நானும் face பண்ணேன்.. விஜய் பட நடிகை ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அனுகிருஷ்ணா. முக்கியமாக விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு சிறு வயது தங்கையாக நடித்திருப்பவர் தான் இந்த அனுகிருஷ்ணா.

அதுமட்டுமில்லாமல் கத்தி படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் விஜய்க்கு தங்கையாகவும் அனுகிருஷ்ணா நடித்திருக்கிறார். இவர் ஹீரோயினாக நடித்த போயா வேலைய பாத்துக்கிட்டு, இளமி, சின்னஞ்சிறிய பறவை போன்ற படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் ஒரு நடிகை என்ற அந்தஸ்தை பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

anukrishna

மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட அனுகிருஷ்ணா சென்னையில் செட்டில் ஆகி தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார்.

இவருக்கு தமிழில் ரஜினியை மட்டும் தான் மிகவும் பிடிக்குமாம். ரஜினியின் தீவிர ரசிகையாக இருக்கும் அனுகிருஷ்ணா எப்படியாவது ரஜினி நடிக்கின்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

vijay2

இந்த நிலையில் எப்போதும் போலவே இவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்வி கேட்டபோது தன்னிடமும் நிறைய பேர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஆனால் நான் அதற்கு வரவில்லை. சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேற வேலையை பார்த்துக் கொண்டாவது என் வாழ்க்கையை ஓட்டி விடுவேன். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட போது நான் மறுத்திருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் கூறினார் அனுகிருஷ்னா.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini