என் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணனும்னு தோணுது - நூறு சாமி ஏற்படுத்திய தாக்கம்!

 
noorusami

பிச்சைக்காரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி மீண்டும் நடித்துள்ள திரைப்படம் தான் நூறு சாமி. இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை சுவாசிகா நடித்து  அசத்தி  இருக்கிறார் . 

இந்தத் திரைப்படத்தில் கணவனை இழந்த பெண்ணான நடிகை சுவாசிகா தனது இரண்டு பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டு வளர்கிறார். அதன் பிறகு தன்னுடைய அம்மா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கும் அந்த பிள்ளைகள் விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

noorusami

பிறகு சுவாசிகாவுக்கு விஜய் ஆண்டனியை பிடித்துப் போக திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் . ஆனால் அந்த ஊரை சேர்ந்த சிலர் சுவாசிக்கா திருமணம் செய்து கொண்டால் அது மிகப்பெரிய அவப்பெயர் சமூக சீர்கேடு என எண்ணி திருமணத்தை நிறுத்த சதி திட்டம் போடுகிறார்கள்.

பிறகு அவர்களுக்கு திருமணம் ஆனதா?  இல்லையா? என்பது தான் இந்த நூறு சாமி திரைப்படத்தின் மீதிக்கதை. இந்த திரைப்படம் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக எமோஷ்னலான இந்த திரைப்படம் ஆடியன்ஸை கவர்ந்திருக்கிறது.  

இந்த நிலையில் திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்த பிறகு நானும் கணவனை இழந்த என்னுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எனக்கு தோன்றுகிறது என கண்கலங்கியபடி நடிகை சுவாசிகா மற்றும் விஜய் ஆண்டனியிடம் மேடையிலே கூறினார். இதுவே நூறு சாமி படத்தில் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

Tags

From Around the web