×

வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ளேன்… டிவிட்டரில் குஷியான சரண்யா!

வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ளதாக பிரபல தொகுப்பாளினி சரண்யா தெரிவித்துள்ளார்.

 

வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ளதாக பிரபல தொகுப்பாளினி சரண்யா தெரிவித்துள்ளார்.

அஜித்தின் வலிமை திரைப்படம் பல இழுபறிகளுக்குப் பின்னர் இப்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்தோடு நடிக்கும் நடிகைகள் யார் என்பது கூட ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஹூமா குரேஷி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இறைவி, காதலும் கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்த தொகுப்பாளினி சரண்யா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவரிடம் வலிமை படம் பற்றி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News