×

கொரோனா என்பதால் வீட்டுக்குள்ளேயே என் இளவரசருக்காக காத்திருக்கிறேன் – பிக்பாஸ் பிரபலம் பேட்டி!

இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஷெரின் தனது காதல் இளவரசருக்காக காத்திருப்பதாக சொல்லியுள்ளார்.

 

இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஷெரின் தனது காதல் இளவரசருக்காக காத்திருப்பதாக சொல்லியுள்ளார்.

நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின் சில படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

இப்போது இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் எப்போது திருமணம் என்று கேட்கப்பட்ட போது ‘திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்ற நபர் என்று நம்  வாழ்வில் யாராவது இருக்கவேண்டும். ஆனால் அப்படியொரு நபர் இப்போது என்னுடைய வாழ்வில் இல்லை. இது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் நான் வீட்ற்குள்ளேயே என்னுடைய  இளவரசருக்காக காத்திருக்கிறேன்எனக் கூறியுள்ள ஷெரினுக்கு இப்போது வயது 36 ஆகும்.

From around the web

Trending Videos

Tamilnadu News