ஒரு அப்பாவா நான் தோற்றுப் போய்ட்டேன்.... கண் கலங்கிய விஷ்ணு விஷால்!

 
vishnu vishal

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் தமிழில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றிருந்தார் .

தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர் பறவை, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் விஷ்ணு விஷாலின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கட்டா குஸ்தி திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது .

vishnu vishal

விஷ்ணு விஷால் முன்னதாக ரஜினி நடராஜன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இதரிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையை சமீபத்தில்  பேட்டி ஒன்றில் நான் ஒரு அப்பாவாக தோற்றுவிட்டேன். நான் என்னுடைய மகனை பிரிந்து இருக்கேன் அவனுடன் எப்போதும் இருக்கமுடியவில்லை அது எனக்கு மிகுந்த  வருத்தம் அளிக்கிறது.

vishnu vishal

 

அப்படி பார்க்கும்போது நான் ஒரு அப்பாவாக என் மகனிடம் தோற்றுவிட்டேன். அவனுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து தான் செய்கிறேன். இருந்தாலும் அவனுடன் கூட இருக்க முடியவில்லை என்பது எனக்கு ஒரு மன வருத்தத்தை கொடுக்கிறது என பேசிக்கொண்டிருக்கும் போதே விஷ்ணு விஷால் கண்கள் கலங்கியது. 

Tags

From Around the web