×

மொத்தமா 50 நாட்கள் தாங்க… படத்த முடிச்சிடுறேன் – தனுஷிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள படத்துக்காக 50 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளாராம் இயக்குனர்.

 

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள படத்துக்காக 50 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளாராம் இயக்குனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்துக்கு தற்போது  D 43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்காக நீண்ட நாட்களாக திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இந்நிலையில் இப்போது எல்லா பணிகளும் முடிந்துள்ள நிலையில் தனுஷிடம் 50 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு தனுஷ் சம்மதித்து தேதிகளை ஒதுக்கும் பட்சத்தில் உடனடியாக ஷூட்டிங் செல்ல தயாராக இருக்கிறாராம் கார்த்திக் நரேன். தனுஷ் இப்போது தனது இந்தி படமான அத்ராங்கி டேவில் கவனம் செலுத்தி வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News