×

கொரோனாவால் வாசனை & சுவை அறியும் திறனை இழந்துள்ளேன் – பிரபல நடிகர் தகவல் !

பிரபல நடிகரும் பாடகருமான ஆரோன் கொரோனா வைரஸால் தனது சுவையறியும் திறனை இழந்துள்ளதாக சொல்லியுள்ளார்.

 

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல பிரபலங்களும் அடங்கியுள்ளனர். கனடா பிரதமரின் மனைவி, ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா இருப்பதை அறிந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபல நடிகரும் பாடகருமான ஆரோன் ட்வைட் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான சோதனைகளை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாஸிட்டிவ் என வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கொரோனா வைரஸால் ‘நான் எனது சுவையறியும் திறனையும், வாசனை அறியும் திறனையும் இழந்துள்ளேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News