
Cinema News
விஜய் மீது அவ்வளவு வன்மமா?.. ரஜினி அனுபவம் விஜய் வயசு.. நறுக்குன்னு சொன்ன பிரபலம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் குதித்தார். தற்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அவரே கூறி இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் 75 வயதிலும் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமின்றி வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறான் ரஜினி. ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக பார்க்காமல் அதற்கு ஒரு படி மேல் தங்களின் தலைவனாக பார்க்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய்-அஜித் என்று ரசிகர்கள் சண்டை போட்ட காலம் போயி தற்போது ரஜினி-விஜய் என்று ரசிகர்கள் மோதிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. அந்த வகையில் அவர்களின் படம் வெளிவரும் அன்று அதற்கு எதிர்மறையில் இருக்கும் ரசிகர்கள் நெகட்டிவாக பேசி அந்தப் படத்தை எவ்வளவு கெடுக்க முடியுமோ கெடுத்து விடுகின்றனர். இதே போல தான் லியோ படத்திற்கும் ரஜினி ரசிகர் சினிமா பிரபலம் ஆதவன் செய்தார் என்று விஜய் ரசிகர்கள் அவர் மீது குற்றச்சாட்டை வைத்தனர்.

நேர்காணல் ஒன்றில் இதைப் பற்றிய பேசிய ஆதவன், ” நான் ரஜினி ரசிகன் தான். ஆனால் விஜய்க்கும் எனக்கும் எந்த மாதிரியான தொடர்பு என்று யாருக்கும் தெரியாது. அவருடைய முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தை முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் பார்த்தேன். நான் ஆர்.ஜே வாக ரேடியோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் காவலன், துப்பாக்கி போன்ற படங்களின் ப்ரமோஷனுக்காக வருவார். அவருக்காக ஹார்ட்டின் போட்டு டி-ஷர்ட் எல்லாம் பரிசாக கொடுத்தேன்”.
”எனக்கும் விஜய் படங்கள் எல்லாம் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் எனக்கும் விஜய்க்கும் எந்த விதமான வன்மமும் கிடையாது. இது யாரோ செய்த சதி. லியோ படத்தை நான் கலாய்த்ததாக வீடியோ போட்டு எனக்கு எதிராக கிளப்பி விட்டுட்டாங்க. அந்த வீடியோவை முழுசா பாத்தீங்கன்னா தெரியும் நான் அமெரிக்காவில் லியோ படம் பார்க்க சென்றிருந்தேன். தியேட்டர் உள்ளே போன உடனே ஃபயர் அலாரம் என்று சொல்லி படத்தை போடாமல் நேரம் தாழ்த்தி கொண்டிருந்தனர். அதைக் கண்டித்து தான் பேசினேன்”.
’படம் பார்ப்பதற்கு முன்னாடியே நான் எப்படி படத்தைப் பற்றி தப்பாக பேச முடியும்?. ஆனால் சில பேர் நான் படத்தை கலாய்த்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. விஜயின் வயசு ரஜினியின் அனுபவம். அன்றும், இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான். அவரை தாண்ட இன்னொருத்தன் பிறக்கவும் முடியாதும், பொறந்தா அதை பண்ணவும் முடியாது. இதை விஜய்யும் ஒப்புக்கொள்வார். என்று கூறியுள்ளார்.