ஞானபீடம் பெற்றதை பாரதிராஜாவிடம் மறைத்துவிட்டேன் - மனம் குமுறிய வைரமுத்து!

 
bharathiraja vairamuthu

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுச் சென்று தமிழக அரசின் முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இந்த நிலையில் மறைந்த பாரதிராஜாவை குறித்து வைரமுத்து அவர்கள் கூறிய விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் அனைவரையும் மனம் கனக்க செய்கிறது. அதாவது கடைசி காலத்தில் நான் ஒரு செய்தியை இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் சொல்ல மறைத்து விட்டேன். 

vairamuthu

அடிக்கடி நினைவு தப்புகிற வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு கலைஞனிடம் நான் ஞானபீடம் பெற்று இருக்கிறேன் என்று என் பெருமையை பீற்றிக்கொள்ள விரும்பவில்லை . நம் பெருமையை பேசுகிற இடத்தில் அவரது உடலையும் இல்லை .

கடைசிவரை இந்த விஷயத்தை நான் மறைத்து விட்டேன். நான் சொல்லியிராவிட்டால் வேறு யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். அந்த செய்தி அவர் அறியாமலே மண்ணுக்குள் போய்விட்டார் என பாரதிராஜா குறித்து  வைரமுத்து மனகலக்கத்துடன் பேசி இருக்கிறார். முன்னதாக வைரமுத்து ஞானபீடம் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web