×

அவளை கடத்தி கொண்டுவந்து கல்யாணம் செய்தேன் - மகனிடம் கூறிய நடிகர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபலமான நடிகர் ரியாஸ்கான். இவர் 1992 ஆம் ஆண்டு நடிகை உமா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷாரிக்கான்,  ஷம்ஷட்கான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

மூத்த மகன் ஷாரிக் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானார். இவர் தற்ப்போது சினிமாவில் நடித்து வருகிறார். உமா ரியாஸ்கான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார். இந்நிலையில் நடிகர் ரியாஸ்கான் மகன் ஷாரிக் உடன் சேர்ந்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த போது தன் திருமணத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.

அதாவது ‘எங்கள் திருமணம் கலப்பு திருமணம் என்பதால் இரண்டு பேர் வீட்டிலும் மன வருத்தம் இருந்தது. அதனால் உமாவ கடத்திட்டு வந்துதான் நான் திருமணம் செய்துகொண்டென். அதற்கு பிறகு ஷாரிக் பிறந்த பிறகுதான், இரண்டு குடும்பங்களும் மீண்டும் சேர்ந்தது. அதனால் ஷாரிக்கை எல்லோரும் செல்லமாக வளர்த்தோம். ’ எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News