×

விஜயகாந்துக்காக ரஜினி பட வாய்ப்புகளை இழந்தேன்… ஆனால் நடந்தது வேறு? இயக்குனர் புலம்பல்!

பிரபல இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான் தனக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது பற்றிக் கூறியுள்ளார்.

 

பிரபல இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான் தனக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது பற்றிக் கூறியுள்ளார்.

90 களில் விஜயகாந்தின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். இதனால் விஜயகாந்த்துக்கும அவருக்குமான நட்பு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. கிட்டத்தட்ட விஜயகாந்தின் எல்லா படங்களின் கதை மற்றும் வசனத்திலும் அவரின் பங்கு இருக்கும் அளவுக்கு இருந்தது. இந்நிலையில் லியாகத் அலிகானின் திறமையைப் பார்த்த சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஏவி எம் நிறுவனம் ஆகியவை  ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளன. ஆனால் விஜயகாந்தோ என் நண்பன் என் படத்தின் மூலமாகதான் இயக்குனராக வேண்டும் என சொன்னதால் அந்த பட வாய்ப்புகளை வேறு இயக்குனர்களுக்கு சென்றன.

அதன் பின் விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய எங்க மொதலாளி படமும் தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் விஜயகாந்துடன் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஒருவேளை ரஜினி படங்களை அவர் இயக்கி இருந்தால் இன்று முன்னணி இயக்குனராக இருந்திருப்பார்.

From around the web

Trending Videos

Tamilnadu News