×

நான் எப்போதுமே காசு எடுத்துபோவதில்லை – கஞ்சத்தனத்தை வெளியே சொன்ன சூப்பர் ஸ்டார்!

நடிகர் ஷாருக் கான் சமூகவலைதளத்தில் தனது ரசிகர் ஒருவரின் வித்தியாசமானக் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

 

நடிகர் ஷாருக் கான் சமூகவலைதளத்தில் தனது ரசிகர் ஒருவரின் வித்தியாசமானக் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டின் பாட்ஷா என சொல்லப்படும் நடிகர் ஷாருக் கான் நடிப்பு, தயாரிப்பு, ஐபிஎல் அணி எனப் பலத்துறகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன் படி சில நாட்களுக்கு முன்னர் அவர் என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம் என அறிவித்தார். இதையடுத்து பலரும் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர்.

அதில் ஒரு ரசிகர் பிரபலமாகாத உங்கள் நண்பர்களுடன் டின்னருக்கு சென்றால் நீங்களே பணத்தை செலுத்துவீர்களா அல்லது பகிர்ந்து கொள்வீர்களா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஷாருக்  ‘இதில் பிரபலமாக இருப்பது முக்கியமே இல்லை. நான் எப்போதுமே டின்னருக்கு செல்லும் பணத்தை எடுத்து செல்வதே இல்லை’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News