×

ஒரே ஒரு படம்தான் எடுத்தேன்.. மொத்தப் பேரும் க்ளோஸ்....அட்லியே இது நியாயம்தானா?

விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் என சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரவுண்டு கட்டி அடித்து 70 கோடிக்கும் மேல் அள்ளி சென்றனர். மேலும், அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
 

இந்நிலையில் பிகில் பட பட்ஜெட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் வெளியே கசிந்துள்ளது. ரூ.145 கோடி பட்ஜெட். 140 நாட்களில் படப்பிடிப்பு என அட்லீ உறுதியளித்த பின்னரே படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்பு அதிக நாட்கள் நடந்து ரூ.170 கோடி பட்ஜெட்டில் முடித்துள்ளார் அட்லீ. 

இதில் துணை நடிகர்கள் சம்பளம் மட்டும் ரூ8 கோடியை தொட்டு விட்டதாம். இதற்கான கணக்கும் துணை நடிகர் ஏஜெண்டிடம் சரியாக இல்லாததால் அவருக்கும் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது.

2.30 மணி நேர படத்திற்கு 5 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு காட்சிகளை அட்லீ எடுத்துள்ளார். இதுவே அதிக பட்ஜெட்டிற்கு காரணமாக அமைந்துவிட்டது. எனவே, விஜய், ஆனந்தராஜ், இந்துஜா என பலரும் நடித்த பல காட்சிகள் வெட்டப்பட்டு இறுதியில் 3மணி திரைப்படமாக பிகில் வெளியானது.

அட்லீ முதலில் எடுத்த ராஜாராணி, தெறி என இரண்டு படங்களை மட்டுமே கூறிய பட்ஜெட்டில் எடுத்தார்.  அதன்பின் மெர்சலில் தனது ஆட்டத்தை காட்டினார். ரூ.90 கோடி என துவங்கிய அப்படம் முடிக்கும் போது ரூ.125 கோடியை தொட்டது. இன்னும் அந்த நஷ்டத்திலிருந்து தேனாண்டாள் பிலிம்ஸ் மீளவில்லை. அந்த தயாரிப்பாளர் படம் எடுப்பதையே நிறுத்திவிட்டார். பிகில் படமும் வெற்றிப் படமா இல்லை தயாரிப்பாளருக்கு நஷ்டமா என்பது பற்றி சரியான தகவல் எதுவும் வெளியாகவே இல்லை. 

இத்தனைக்கும் தமிழில் ஏற்கனவே வெற்றி பெற்ற பல திரைப்படங்களின் கலவையாகவே அட்லீயின் படங்கள் உருவாகிறது என்பதற்கு சமூக வலைத்தளங்களே சாட்சி.. 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரைப் போலவே பட்ஜெட்டை இழுத்தும் விடும் வேலையை நன்றாக செய்கிறார் அட்லீ. தன்னை மற்றொரு ஷங்கராகவே அவர் நினைக்கிறார். ஆனால், பட்ஜெட்டை சரியாக கொடுத்துவிட்டு இந்தியன்2 படபிடிப்பை துவங்குங்கள் என ஷங்கருக்கு கடிவாளம் போடப்பட்டு, வேறு வழியில்லாமல் அவரும் அதை செய்து விட்டே படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார்.

காலம் அட்லியையும் மாற்றும். அல்லது தயாரிப்பாளர் மாற்றுவார்கள்.. பிகில் திரைப்படத்தால் பலரும் பாதிக்கப்பட்டிருக்க ஷாருக்கான் படத்துக்கான டிஸ்கஷனில் பிசியாக இருக்கிறாராம் அட்லீ.. 

ஷாருக்கான் ஜாக்கிரதை!....

From around the web

Trending Videos

Tamilnadu News