×

விஜய்க்காக என் தொழிலையே விட்டுட்டு பியூன் வேலை பார்த்தேன் - எஸ்.ஏ.சி வருத்தம்!

மகன் விஜய்க்காக சினிமா தொழிலையே விட்டுவிட்டேன் - எஸ்.ஏ.சந்திரசேகர்

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டு கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் விஜய் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டுவிட்டார்.

தந்தை சந்திரசேகருடனான உறவை முறித்துகொள்வதாகவும்  இனி அவருக்கும் எனக்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை எனவும் நற்பணிமன்றத்திலிருந்து யாரும் பணி செய்ய வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்ப்போது இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், "நான் விஜய்க்காகவே வாழ்ந்து வருகிறேன், அவரை நல்ல நடிகனாக வளர்க்க என் தொழிலையே விட்டுவிட்டு கூலிக்காரன்போல பியூன்வேலை பார்த்துள்ளேன்’’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த குடும்ப விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. என்ன தான் நடக்கிறது விஜய் வீட்டில் என பலரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News