×

முதல்ல பாத்தப்ப தலக்கணம் பிடிச்சவருன்னு நினச்சேன்… விஜய்யைப் பற்றி பேசிய தங்கை நடிகை!

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை சரண்யா மோகன், முதலில் விஜய்யை தலைக்கணம் பிடித்தவர் என நினைத்ததாக சொல்லியுள்ளார்.

 

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை சரண்யா மோகன், முதலில் விஜய்யை தலைக்கணம் பிடித்தவர் என நினைத்ததாக சொல்லியுள்ளார்.

யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தன்  மூலம் அறிமுகமானவர் சரண்யா மோகன், அதன் பின்னர் வெண்ணிலா கபடிகுழுவில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனாலும் கதாநாயகியாக பெரிய அளவில் வேடங்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது முதலில் விஜய்யை பார்த்த போது தலைக்கணம் பிடித்த மனிதர் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் பழகப் பழக விஜய் தன்னை தங்கை போலவே நடத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த படத்தின் படப்பிடிப்பை விட்டு வரவே வருத்தமாக இருந்ததாகவும் சொல்லியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News