×

வனிதா மாறிடுச்சுனு நெனச்சேன் ஆனால்...  பீட்டருக்கு அட்வைஸ் கொடுத்த ராபர்ட்..!

வனிதாவின் இரண்டாவது கணவர் ராபர்ட் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசிய அவர், "வனிதா உணமையில் சிங்கப்பெண் என்றால், அவர் பீட்டரிடம், போய் உன் குடும்பத்தை பார் என்று சொல்லியிருக்க வேண்டும்.

 

அதே பீட்டர் பாலுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் "உண்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்". குக்கு வித் கோமாளியில் வனிதாவை பார்ததும் பரவாயில்லை வனிதா மாறிடிச்சினு நெனச்சேன். ஆனால், இதை எல்லாம் பார்க்கும் போது..... என சலிப்புடன் கூறினார் ராபர்ட்.

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News