×

நான் பேசுவதை இப்போதும் புன்னகையுடன் கேட்கிறாய்... திருமண நாளுக்கு ஃபீலிங் காட்டிய குஷ்பு

25 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
 

அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த ரஜினி, கமல், கார்த்தி, சத்தியராஜ், பிரபு, சரத்குமார் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,  இன்று தனது திருமணநாளை கொண்டாடிய அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு ‘ கடந்த 20 வருடங்களாக எதுவும் மாறவில்லை. இப்போது வாரை நான் பேசுவதை நீ புன்னகையுடன் கேட்கிறாய். தன்னுடைய திருமணத்திற்கே தாமதமாக வந்தவன் நீ. அதன் பின் எல்லாம் நீதான். இனிய திருமண வாழ்த்துக்கள்’ என சுந்தர் சி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இன்றுதான் நீ உன் காதலை என்னிடம் கூறினாய் என படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் குஷ்பு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News