×

அப்பாவிடம் பேசினேன்.. மயக்க நிலையிலிருந்து மீண்டுவிட்டார்... சரண் வெளியிட்ட வீடியோ

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். 

இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரின் மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ என் தந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் பேசினேன். மருத்துவர்களிடம் அவர் சைகையால் பேசுகிறார். அவருக்காக பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன்’ என அவர் பேசியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News