×

சிம்புதான் தம்பின்னு நினைச்சேன்.. இப்ப இத்தனை பேரா?.... உருகும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

பல பஞ்சாயத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
 

இந்நிலையில், நேற்று இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பிறந்தநாளை கொண்டாடினார். டிவிட்டரில் சிம்பு ரசிகர்கள் பலரும்  அவருக்கு வாழ்த்து மழை பொழிந்துவிட்டனர். பலரும் அவரை அண்ணா என்றே அழைத்து டிவிட் செய்திருந்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்றைய நாளை மிகச்‌ சிறப்பாக்கிய அன்பின்‌ சிம்புவும்‌... அவரது வெறித்தனமான ரசிகர்களுக்கும்‌ மனதின்‌ ஆழத்திலிருந்து நன்றிகள்‌. ’மாநாடு’ படத்தை சிலம்பரசன்‌ என்ற ஒரு சகோதரனோடு தான்‌ தொடங்கினேன்‌. ஆனால்‌ இன்று அவர்‌ எனக்குப்‌ பரிசளித்திருப்பதோ பல லட்சக்கணக்கான சகோதரர்களை. அத்தனை பேருக்கும்‌ மனப்பூர்வ நன்றிகள்‌. நன்றி மட்டும்‌ போதாது. ’மாநாடு’ நம்‌ ஒவ்வொருவருக்கும்‌ எவ்வளவு முக்கியம்‌ என்பதை அறிவேன்‌.

எத்தனை தடைகள்‌ வந்தாலும்‌ கடந்து மாநாட்டை வெற்றிப்படமாகத்‌ தருவதே, நான்‌ பதில்‌ செய்யும்‌ நன்றியாக இருக்க முடியும்‌. செய்வோம்‌. இணைந்தே வெல்வோம்‌. மிகப்‌ பெரிய நம்பிக்கையை ஒரு தயாரிப்பாளனான எனக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள்‌. இந்த டானிக்கை அருந்திய பலத்தோடு எதிர்‌ வரும்‌ நாட்களை அர்த்தமுள்ளதாக்கிக்‌ கொள்கிறேன்‌. நன்றி நன்றி’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News