×

என் மூத்த மகனை வேண்டாம் என சொன்னேன் – வீடியோவில் வருத்தப்பட்ட நடிகை !

நடிகை சமீரா ரெட்டி தனது மூத்த மகன் ஹன்ஸை வேண்டாம் என சொல்லி கணவரிடம் கொடுத்தது பற்றி வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

 

நடிகை சமீரா ரெட்டி தனது மூத்த மகன் ஹன்ஸை வேண்டாம் என சொல்லி கணவரிடம் கொடுத்தது பற்றி வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படம் மூலம் பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் அவர் நடித்த அசல், வெடி மற்றும் வேட்டை ஆகிய படங்கள் சரியாக போகாததால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து

தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள அவர்,  சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ‘என் முதல் மகன் ஹன்ஸ் பிறந்தபோது உடல் எடை மிகவும் அதிகமாகி இருந்தேன். குழந்தையை விட்டு நான் விலகியே இருந்தேன். அவனை நான் என் கணவரிடம் கொடுத்து ‘இந்த குழந்தையை எடுத்துச் சென்றுவிடுங்கள்’ எனக் கூறினேன். அப்போது என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. நான் செய்த மிகப்பெரிய தவறாக அதை உணர்கிறேன். ’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News