×

என்னை யாருமே கண்டுக்கல… 20 முறைக்கு மேல் தற்கொலை செய்ய முயற்சி பண்ணேன் – நடிகர் புலம்பல்!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நாயகனாக அறியப்பட்ட பொன்னம்பலம் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நாயகனாக அறியப்பட்ட பொன்னம்பலம் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.

1990 களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். அடிப்படையில் ஸ்டண்ட் நடிகரான இவர் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழக்க நகைச்சுவை வேடங்களில் சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அதனால் அரசியலில் இறங்கிய அவர் பாஜகவில் சேர்ந்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 லும் கலந்துகொண்டார். சில வாரங்களுக்கு முன்னட் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு முன்னணி நடிகரான கமல் மற்றும் அவர் இருக்கும் பாஜக வினர் நிதியுதவி அளித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவர்,  ஒரு இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ‘நான் நிறைய சம்பாதித்தேன். ஆனால் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை. இப்போது சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். சரத்குமார் மற்றும் கமல் ஆகியவர்கள் உதவி செய்துள்ளனர். அதே போல என்னுடன் நடித்த மற்ற நடிகர்களும் உதவினால் நன்றாக இருக்கும். சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் 20 முறைக்கு மேல் தற்கொலை முயற்சி மேற்கொண்டேன். நான் உறுப்பினராக இருக்கும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.’ என உருக்கமாக பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News