Categories: Cinema News latest news throwback stories

உடனே துபாய்க்கு போகணும்.. ஷாமிலிக்கு வந்த பிரச்சனை.. உதவிக்கரம் நீட்டிய அஜித்!..

1993 இல் அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் அஜித். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதல் இப்போது வரை அதிகமான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அஜித் குமார். இதனால் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

பொங்கலை முன்னிட்டு இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் கூட நல்ல வெற்றியை பெற்றது. நடிகர் விஜயக்கு பிறகு தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். அடுத்து மகிழ்திருமேணி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது.

சினிமா வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டுக்குமே சமமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அஜித். அஜித் அவரது மனைவியின் தங்கையான ஷாமிலிக்கு பல உதவிகளை செய்துள்ளார். ஷாமிலி ஓவியத்தின் மீது ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் எப்போது படப்பிடிப்பிற்கு சென்றாலும், படம் முடிந்ததும் தனது குடும்பத்திற்கு பரிசுகள் வாங்கி தருவது வழக்கம்.

ஷாமிலிக்கு அஜித் செய்த உதவி:

அப்படி வாங்கும்போது ஷாமிலிக்கும் கூட பரிசுகள் வாங்கி வருவாராம். ஒருமுறை ஓவிய கண்காட்சிக்காக ஷாமிலி துபாய் போக வேண்டி இருந்தது. ஆனால் ஷாமிலியை தனியாக அனுப்ப முடியாது என்ன செய்யலாம் என யோசித்துள்ளனர். மேலும் அங்கு ஷாமிலி வரைந்த படங்களும் கூட கண்காட்சிக்கு வைக்கப்பட இருந்தது.

இதை கேள்விப்பட்ட அஜித், அப்போது அவருக்கு இருந்த நிகழ்வுகளை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு தனது குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு ஷாமிலியுடன் துபாய் கிளம்பிவிட்டார். அந்த அளவிற்கு குடுமபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜித் என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண தேவை இல்ல! – தயாரிப்பாளரையே திட்டிய அஜித்…

Rajkumar
Published by
Rajkumar