கமல் பேச்சை கேட்டு ஏமாந்திட்டேன் - ரகசியம் உடைத்த ஊர்வசி!

 
kamal hassan

நடிகை ஊர்வசி: 

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நிச்சயம் இவருக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்று இன்றும் பல இயக்குனர்கள் இவரை புகழ்ந்து பேசுவதுண்டு. திரைப்படங்களில் வெகுளியான கதாபாத்திரம் முதல் சீரியஸ் ஆன கதாபாத்திரம் வரை எது கொடுத்தாலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுப்பவர் நடிகை ஊர்வசி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார் ஊர்வசி. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களையும் சிறப்பு தோற்றங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் குறித்து பேசி இருக்கும் ஊர்வசியின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கிளாமருக்கு நோ: 

அதாவது, அப்போதே டாப் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் அவருக்கு ஈடாக கவர்ச்சியை வாரி இறைக்க வேண்டும். கிளாமரான ஆடைகளை அணிந்து கொண்டு நடிக்க வேண்டும். இப்படியான ரூல்ஸ் அப்போதே இருந்தது.

kamal hassan

ஆனால், எனக்கு அந்த ஆடை பிடிக்கவே பிடிக்காது சவுகரியமாக இருக்காது. கிளாமர் காட்சிகளில் நடிக்கணும் என்றால் எனக்கு செட்டே ஆகாது. இதனை நான் கமல்ஹாசனிடமே சொன்னேன். ஆனால் அவரும் நீ மலையாளத்தில் சிறந்த பட வாய்ப்புகள் கிடைத்தால் தாராளமாக நடிங்க என்று எனக்கு சொன்னார்.

கமலை நம்பி ஏமாந்துவிட்டேன்: 

அவரின் பேச்சை நம்பி நான் ஏமாந்துவிட்டேன்.  அந்த திரைப்படங்கள் எனக்கு பெரிதாக பெயரும் புகழும் பெரிதாக கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவுக்கு போனாலும் நான் கிளாமர் காட்ட மாட்டேன் என்று இயக்குனர்கள் சண்டைதான் போடுவார்கள் என்றார் ஊர்வசி. இவர்கள் இருவரும் 
மைக்கேல் மதன காமராஜா, உத்தம வில்லன் உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags

From Around the web