×

அதை பார்த்து தான் இம்ப்ரெஸ் ஆனேன்... மூன்றாவது கணவர் குறித்து மனம் திறந்த வனிதா!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள்.  இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.

 

அதையடுத்து ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்துவிட்டனர்.  நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்த வனிதா திருமணம் செய்துகொள்போவதாக அறிவித்து பின்னர் பிரிந்துவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்தை செய்யவிருக்கிறார் வனிதா.

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. தனது வருங்கால கணவர் குறித்தும்  அவருடன் காதல் எப்படி ஏற்பட்டது என்பதை குறித்தும் மனம் திறந்த வனிதா, " பீட்டர் பாலை முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தேன். அவர் ஒரு வி.எஃப்.எக்ஸ். டெக்னிஷியன். இயக்குநர் ஆகும் ஐடியாவில் இருந்தார். அப்போது தான் பீட்டரின் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன்.

அவர் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் வைத்திருப்பதாக கூறினார். தொழிலில் இருவருக்கும் ஒரே மாதிரியான ஈடுபாடு இருந்தது தான் என்னை முதலில் இம்பிரஸ் செய்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல ஒருவரைப் பற்றி ஒருவர் நிறைய தெரிந்து கொண்டோம். பீட்டர் பால் ரொம்ப அக்கறையானவர், உண்மையானவர், அர்ப்பணிப்பு குணம் கொண்டவர். " என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News