×

என்னுடைய 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் … அமீர்கான் மகளின் மீடு சம்பவம்!

நடிகர் அமீர்கானின் மகள் ஐரா கான் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியுள்ளார்.

 

நடிகர் அமீர்கானின் மகள் ஐரா கான் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். இவருக்கு முதல் மனைவியின் மூலம் ஐரா கான் என்ற மகள் உள்ளார். ஆனால் அமீர்கானுக்கும் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் தாயோடு வசித்து வந்தார். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ஐரா கான் தற்போது தனக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் ‘நான் சிறுமியாக இருக்கும்போதே என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அது சுமூகமாக இருந்ததால் என்னைப் பாதிக்கவில்லை. நான் என் அம்மாவுடன் வசிக்கும் போது 14 வயதில் ஒரு நபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது அடிக்கடி நடக்கவில்லை. அதனால் அதை புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதைப்பற்றி நான் வேறு யாரிடமும் கூறவில்லை. ஏனென்றால் அந்த பிரச்சனையை நான் கையாள வேண்டும் என நினைத்தேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News