×

ஒரு வேலை சாப்பிட கூட பணம் இல்லாமல் பட்டிணி கிடந்தேன் - புலம்பிய நடிகர்!

தமிழ் சினிமாவில் தனது எழுத்து மற்றும் படைப்புளால் தனக்கென தனி அங்கிகாரத்தை கொண்டிருப்பவர் நடிகர் பார்த்திபன். கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படம் பெரும் வரவேற்பை பெற்றது.
 

இந்நிலையில் அவர் எழுதிய கிறுக்கல்கள், கவிதைத்தொகுப்பு, கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தின் இயக்கம் ஆகிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர் சிங்கிள் ஷாட்டில் இரவில் நிழல் படத்தை இயக்குகிறேன். விஜய் சேதுபதியுடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளேன். புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் வெப் சீரிஸில் நடிக்கிறேன்.

வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் 3 நாட்கள் கூட சாப்பிடாமல் வேலை செய்திருக்கிறேன். சபரிமலைக்கு போகவும், சாப்பிடவும் கூட காசில்லாமல் 75 நாட்கள் விரதமிருந்து அதன் பின்னர் சென்றேன் என கூறியது பலரையும் மனம் உறைய வைத்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News