×

நான் பார்த்துட்டேன்... தரமான சம்பவம் - விஜய் சேதுபதியின் மாஸ்டர் ட்ரைலர் விமர்சனம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்பட்டால் இப்படம் வருகிற 2020 பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது அவரிடம் மாஸ்டர் ட்ரைலர் குறித்து கேட்டதற்கு, " மாஸ்டர் படத்தோட ட்ரைலர் நான் பார்த்துட்டேன். ரொம்ப சூப்பரா வந்திருக்கு. இது கண்டிப்பாக தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News