×

தமிழ்நாட்டை எரித்திடுவேன்...  மீரா மிதுனுக்கு உண்மையிலே கிறுக்கு பிடித்துவிட்டதா..?

2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத், மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் ஆகிய பட்டங்களை பெற்றவர்தான் தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன். 8 தோட்டக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

 

அழகு போட்டி நடத்துவதில் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் சேரன் மீது அபாண்டமான பழி சுமத்தி அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்றிலிருந்து ஏதேனும் சர்ச்சையாக பேசியே மீடியாக்களின் கண்ணில் தென்பட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா மற்ரும் த்ரிஷா உள்ளிட்டோர் தன்னை காப்பியடிப்பதாக கூறி அவர்களது ரசிகரகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்நிலையில் தற்ப்போது, " தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி போன்று எனக்கு கோபம் வந்தால் நானும் அதையே தான் தமிழகத்திற்கு செய்வேன்.

தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் பத்திரமாக இருக்கிறேன். கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்?! சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் "தயவு செஞ்சு பொட்டி படுக்கையெல்லாம் எடுத்துட்டு சென்னையை காலி பண்ணு ஆத்தா உனக்கு புண்ணியமாப் போகும் என கூறிவருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News