×

எங்க அப்பாவுக்கு ஓட்டுக் கேட்க நானே வரமாட்டேன் – ஸ்ருதிஹாசன் பதிலால் அதிர்ச்சியான தொண்டர்கள்!

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் வயதில் அரசியலில் காலெடுத்து வைத்துள்ளார். அவரின் கட்சியான மக்கள் நீதிமய்யம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தனது சினிமா பணிகளைக் கூட தள்ளிவைத்து அரசியலில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் கமல்.

இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் ‘உங்கள் அப்பாவின் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வருவீர்களா என்ற கேள்வி கேடக்ப்பட்டபோது அதற்கு சான்ஸே இல்லை’ என சொல்லி நழுவி விட்டார். இது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News