×

உன் வீட்டு தொழிலை நான் பண்ணலடா... கொச்சையாக விமர்சித்தவருக்கு நடிகை கொடுத்த பதிலடி...

 

சமூகவலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் #ஹிந்தி_தெரியாது_போடா என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. ஹிந்தி மொழிக்கு எதிராக பலரும் குரல் கொடுத்தனர். மேலும், ‘ஹிந்தி தெரியாது போடா’ மற்றும் ‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ என பதிவிட்ட டீ சர்ட்டுகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களும் வைரலானது.

இந்த புகைப்படங்களை நடிகை காஜல் பசுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைக்கண்ட ஒரு நெட்டிசன் ‘ உனக்கு தமிழ் தெரியுமா?’ என கேட்க மற்றொருவர் ‘ஏன் அவருக்கு நீ கற்று தரப்போறியா?’ எனக்கேட்க, ‘இல்ல எந்த மொழியில கூப்பிட்ட அவ வருவான்னுதான் கேட்டேன்’ என கொச்சையாக பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த காஜல் பசுபதி ‘உங்க வீட்டு தொழிலை நான் பன்றதில்ல மேன். வகை வகையா பொண்ணுங்கள படுக்க கூப்பிடதான் ஹிந்தி படிக்க அவ்ளோ ஆர்வமா?. 2 ரூபாய்கு போற நீ யெல்லாம் கூப்பிட்டா ரோட்ல போற ஒரு நாய் கூட வராது’ என பதிலடி கொடுத்தார்.

காஜல் பசுபதி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News