×

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்.. ப்ரியா பவானி சங்கர் பளீச்!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். ப்ரியாவின் பெயரை கேட்டதும் அவரின் ஹோம்லி லுக் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

 

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ப்ரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ப்ரியா இதுவரை கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, எனக்கு கிளாமர் ஒத்து வராது. என் முகத்திற்கும், உடல்வாகிற்கும் அது சரிபட்டு வராது என்று தெரிவித்துள்ளார்.

குடும்பத்து குத்துவிளக்காக ப்ரியாவை பார்த்த ரசிகர்களுக்கும் அவரை கிளாமராக பார்க்க விருப்பம் இல்லை. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News