×

நான் விவசாயி… விவசாயி என்றுதான் சொல்வேன் – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில்!

புதிய விவசாய திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக அரசின் முதல்வர் இனி தன்னை விவசாயி என சொல்லிக் கொள்ள கூடாது என ஸ்டாலின் கூறியிருந்தார்.

 

புதிய விவசாய திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக அரசின் முதல்வர் இனி தன்னை விவசாயி என சொல்லிக் கொள்ள கூடாது என ஸ்டாலின் கூறியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அடிக்கடி விவசாயி என்றே கூறி வருகிறார். இந்நிலையில் மத்திய விவசாய மசோதாக்களில் கொண்டு வந்துள்ள மூன்று திருத்தங்களை பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்க்கும் போதும் அதிமுக அரசு அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் இந்த மசோதாவை ஆதரித்துவிட்டு இனி விவசாயி என சொல்லாதீர்கள் எனக் கூறியிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘நான் விவசாயி… விவசாயி என்று சொல்லிக்கொள்ளாமல் வேறு எப்படி சொல்வேன். நம் ஆட்சியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டியுள்ளோம். இதெல்லாம் விவசாயியாக இருப்பதால்தான் செய்துள்ளோம். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். அவருக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News