Categories: Cinema News latest news

கமல் ஹோஸ்ட் பண்ணத நான் பண்ண மாட்டேன்! பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்த நடிகர்

BiggBoss: இப்போது பரபரப்பாக பேசப்படுவது விஜய் டிவியில் பிக்பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற செய்திதான். கமல் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அறிவிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. கமலுக்காகவே பார்த்த ரசிகர்கள்தான் ஏராளம். சனி , ஞாயிறு கிழமைகளில் போட்டியாளர்களை அவருடைய கேள்வி ஞானத்தால் புரட்டி எடுக்கும் விதமே தனி.

அதற்காகவே ரசிகர்கள் பிக்பாஸை பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அவருடைய பிஸியான செட்யூலால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவருக்கு அடுத்த படியாக அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. இடையில் கமலுக்கு உடல் நிலை சரியில்லை என ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதையும் படிங்க: தங்கலான் படத்தில் இருக்கும் மெகா சஸ்பென்ஸ்!.. அட சியான் கூட இத சொல்லலயே!…

அதனால் அவர் வருவாரா? இல்லை. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் சிம்பு உள்ளே வந்தார். அதன் அனுபவம் கருதி ஒருவேளை சிம்பு பிக்பாஸ் சீசன்8 ஐ தொகுத்து வழங்குவாரா என்ற வகையில் சில விவாதங்கள் நடைபெற்றன. இருந்தாலும் விஜய் டிவி தரப்பில் சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

சரத்குமார், சூர்யா, விஜய் சேதுபதி, நயன்தாரா என பட்டியல் நீண்டு கொண்டே போனது. ஆனால் சூர்யா படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் வரமாட்டார் என்று சொல்லப்பட்டது. கடைசியில் விஜய் சேதுபதி பெயர்தான் அடிபட்டது. இந்த நிலையில் சத்யராஜும் பெயரும் சோசியல் மீடியாவில் அடிபட்டது.

இதையும் படிங்க: கோட் – தங்கலான் படத்தை வச்சி கங்குவாவை ஹிட் அடிக்க பிளான்!. இது செம ஸ்கெட்ச்சா இருக்கே!..

இதை பற்றி சத்யராஜே என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள். பிக்பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சியை முதன் முதலில் நான் தான் ஹோஸ்ட் பண்ணுகிறேன் என்றால் அது வேற. ஆனால் ஏற்கனவெ கமல் என்ற மாபெரும் உலகநாயகன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி. அப்படிப்பட்ட நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினால் கமல் பாதிப்புதான் அதிகமாக இருக்கும்.

Sathyaraj

உதாரணமாக அமைதிப்படை படத்தின் ரீமேக்கில் எந்த நடிகர் வேண்டுமென்றாலும் நடிக்கலாம். ஆனால் கடைசியில் சத்யராஜ் நடித்தது போல இல்லப்பா என்றுதான் கூறுவார்கள். அதே போல் தான் நானும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் இந்த மாதிரி ஒரு பேர்தான் கிடைக்கும்.

இதையும் படிங்க: நாங்க பெருசா பண்ணிட்டு இருக்கோம்… கோட் தயாரிப்பாளர் போஸ்டால் எக்ஸ் தளமே சூடா இருக்கே!..

மேலும் அப்படியே வாய்ப்பு வந்தாலும் வெப் சீரிஸ், படங்கள் என படு பிஸியாக இருக்கிறேன். அதனால் இதை தொகுத்து வழங்க எனக்கு நேரம் இல்லை என சத்யராஜ் கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini