×

மாமனாருக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ் ! பொன்னியின் செல்வன் பற்றிய தகவலால் பரபரப்பு!

உலக அழகியும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

உலக அழகியும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பு. ஏற்கனவே அதை இரண்டு முறை படமாக்க நினைத்து கைகூடாமல் சென்றது. இந்நிலையில் இப்போது அதை நிறைவேற்றியுள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர் என்பது நமக்கு தெரிந்ததே.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்போது திடீரென அவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை என்று ஒரு சிலர் சொல்கின்றனர். பெரிய பழுவேட்டரயைராக நடிக்கும்  பார்த்திபனுக்கு ஜோடியாகதான் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News