IdhyamMurali2: இதயம் முரளி 5 நாள் வசூல் அப்டேட்!.. அதர்வாவுக்கு ஒரு ஹிட் கிடைக்குமா?..
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் இதயம் முரளி. இந்த படத்தில் அதர்வா, ஃபகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நாட்டி, எஸ்.தமன், மாளவிகா மோகனன், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி இந்த திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அதர்வாவின் அப்பா முரளி பல வருடங்களுக்கு முன்பு நடித்து வெளிவந்த இதயம் படத்தின் கதையை போலவே காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் கதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் கலர்புல்லான இடங்களில் நிறைய காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் ஒரு பீல் குட் ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்திருக்கிறது. படம் வெளியானது முதல் இந்த படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. எனவே இளசுகளிடம் இந்த படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 17 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
