
Cinema News
Idli Kadai: கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தனுஷ்!.. இட்லி கடை கல்லா கட்டுமா?!….
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது.
அதாவது இப்படம் நாளை வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மேலும், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு சென்று ரசிகர்கள் முன்பு இப்படத்தை புரமோஷன் செய்தார் தனுஷ். அதில், சிறு வயதில் இட்லி வாங்கி சாப்பிட காசில்லாமல் தனது சகோதரிகளுடன் சேர்ந்து வயலில் பூ பறித்து அதில் கிடைக்கும் காசில் இட்லி வாங்கி சாப்பிட்டதாக கூறினார்.
அது ட்ரோலில் சிக்க இந்த சம்பவம் உண்மைதான். என் அப்பா இயக்குனர் ஆவதற்கு முன்பு இது நடந்தது என சொல்லி இருந்தார். இட்லி கடை திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. எனவே, இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் பெரிய புரமோஷன் விழாவை தனுஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய் சென்றிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, இந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி வேண்டாம் என தனுஷ் நிறுத்தி விட்டாராம். மேலும், இன்று இரவு சென்னை சத்யம் தியேட்டரில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் ப்ரீமியர் ஷோவுக்கும் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரூர் விவகாரத்தில் அதையும் நிறுத்திவிட்டனர். தமிழக மக்கள் இப்போதுள்ள மனநிலையில் இட்லி கடை படம் பார்க்க தியேட்டர்களுக்கு வருவார்களா என தெரியவில்லை. கரூர் விவகாரம் இட்லி கடையின் வசூலை பாதிக்குமா என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும்.