நான் அரசியலுக்கு வந்தால்.... 3 ஓட்டு கூட விழாது - சல்மான் கான்!
சல்மான் கான்:
பாலிவுட் திரைப்பட உலகில் பிரபல நடிகர் ஆன சல்மான் கான் அங்கு நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பிரபலமான தொக்குப்பாளராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிரபலத்துக்கு ஈடாக சர்ச்சைக்குரிய நபராகவும் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் சல்மான்கான் அரசியல் குறித்து சமீபத்தில் பேசி இருக்கும் விஷயம்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 ஓட்டு கூட விழாது:
அது என்னவென்றால் நான் பெரிய நடிகராக இருப்பதால் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பலமுறை எனக்கு தோன்றினதும் உண்டு. ஆனால், நான் ஒரு வேலை அரசியலில் நின்று தேர்தலில் போட்டியிட்டால் என் சொந்த வீட்டிலிருந்தே ஒரு மூணு வாக்குகள் கூட எனக்கு கிடைக்காது என்று சல்மான் கான் பேசியிருக்கும் விஷயம் தான் அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
