"தாய் கிழவி" படத்தில் நான் நடிச்சிருந்தா சீனே வேற - நடிகை ஷகிலா!
ராதிகாவின் தாய் கிழவி:
நடிகை ராதிகாவின் அசத்தலான நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தாய் கிழவி. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள காடு பட்டியில் வாழும் 75 வயது மூதாட்டியும் அவரது குடும்பத்தையும் சுற்றி கதையாக எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் நடிகர் ராதிகாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
சீனே வேற சீன் போட்ட ஷகிலா:
இந்த நிலையில் ராதிகாவின் நடிப்பை குறித்து சமீபத்திய பேட்டிகளில் பேசிய நடிகை ஷகிலா.... தாய் கிழவி திரைப்படத்தில் நான் மட்டும் நடித்திருந்தால் ராதிகாவை விட மிகவும் நல்லா நடித்திருப்பேன். ஏன்னா சமீபத்துல தான் தெலுங்கு படம் ஒன்னு இல்ல அதேபோன்று கேரக்டரில் நடித்திருந்தேன்.
அந்த மாதிரியான மேக்கப் மட்டும் தான் போடல. மத்தபடி அவங்கள விட நல்லாவே நான் நடிச்சிருப்பேன் என ஷகிலா பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த பேட்டியை ராதிகாவின் நடிப்பை பார்த்து ரசித்த ரசிகர்கள் நக்கல் அடித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
