karthi
Karthi: 2013 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியாணி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருப்பார். கூடவே பிரேம்ஜி, நாசர், ராம்கி ,மதுமிதா, ஜெயப்பிரகாஷ், பிரேம் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவுக்கு பிரியாணி திரைப்படம் நூறாவது திரைப்படம் ஆக அமைந்தது. படம் வெளியாகி கலவையான நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் படத்தில் கதையில் சில ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்கி இருந்ததனால் வெங்கட் பிரபு இந்த படத்திற்காக மிகவும் பாராட்டப்பட்டார்.
இதையும் படிங்க: இவ்ளோ கஷ்டப்பட்டும் ரசிகர்களுக்கு பிடிக்காம போயிடுச்சே!.. கோட்-டில் கோட்டைவிட்ட வி.பி!..
பாக்ஸ் ஆபிஸில் திரைப்படம் வெற்றி பெற்றது. அதாவது பட்ஜெட்டையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் அதிகளவில் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியாணி திரைப்படத்தில் கார்த்திக்கு பதிலாக ஜெய் நடித்திருந்தால் படம் ஹிட் ஆயிருக்கும் என ஒரு பத்திரிக்கையாளர் கூறிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதற்கு காரணம் வெங்கட் பிரபு படம் என்றாலே அவருக்கு என ஒரு குரூப் இருப்பார்கள். பிரேம்ஜி, மிர்ச்சி சிவா, ஜெய், வைபவ் இவர்கள் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட். சென்னை 600028 படம் எந்த அளவுக்கு ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரியும் .
இதையும் படிங்க: கோபியை தடுத்த ஈஸ்வரி… சிக்கிய ரோகிணி… ஓவரா பேசுறீங்க தங்கமயில்..
அதில் கதையே கிடையாது. இருந்தாலும் ஒரு கிரிக்கெட்டை மையமாக வைத்து சில பல மாற்றங்களை செய்து படத்தில் பல நகைச்சுவையான காட்சிகளையும் வைத்து எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களை கோர்த்து படமாக ஆக்கி இருப்பார் வெங்கட் பிரபு .அந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.
biriyani
அதற்கு அடுத்தபடியாக வெளிவந்த சரோஜா திரைப்படமும் அதே மாதிரியான ஒரு கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான். அதிலும் வெங்கட் பிரபுவின் குரூப்பதான் இருக்கும். இப்படி பிரியாணி திரைப்படத்திலும் ஜெய் நடித்திருந்தால் கூட அந்த படம் ஹிட்டாகியிருக்கும். பிரேம்ஜி ஜெய் இருவருக்குமான அந்த காம்போ ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்திருக்கும் என அந்த பத்திரிக்கையாளர் கூறியதுதான் இப்போது வைரலாகி வருகின்றது.
அவர் கூறியதைப் போல வேறு எந்த ஒரு பெரிய ஹீரோக்களை வைத்தும் எடுக்காமல் வெங்கட் பிரபு தனது குரூப்பை வைத்து ஏதோ ஒரு கதையை நகைச்சுவையாக கொடுத்தால் கூட ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் வெங்கட் பிரபுவின் குரூப்பே ஒரு ஜாலியான அரட்டையான குரூப்.
இதையும் படிங்க: ஒன்னு கூடிட்டாய்ங்ப்பா!. குடும்பத்துடன் கோட் படம் பார்த்த விஜய்?!.. ஆச்சர்ய தகவல்!…
இப்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் இவருடைய படத்தில் கண்டிப்பாக இருக்கும். மங்காத்தா திரைப்படத்திலும் அஜித் மட்டுமே ஒரு முன்னணி நடிகர். ஆனால் அவருடன் டிராவல் செய்யும் மற்ற கலைஞர்கள் வெங்கட் பிரபுவின் கூட்டாளிகள் தான்.
அந்த படம் எந்த அளவு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்தது என அனைவருக்கும் தெரியும் .அதேபோல் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் பிரேம்ஜி வைபவ் போன்ற நடிகர்களும் நடித்திருக்கின்றனர். அவர்கள் வரும் காட்சிகளும் நகைச்சுவையாக இருக்கிறது. ரசிக்கும் படியாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…