×

எவனாவது காயப்படுத்தினா ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.. பாத்துக்கோ!

நடிகை மதுமிதா காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். குழந்தை தனமாக நடிகை நளினியுடன் சின்னப்பாப்பா பெரியபாப்பா டிவி சீரியலில் கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டார்.
 

50 நாட்கள் உள்ளே இருந்து பாதி வெற்றியடைந்த போற்றியாளராக பாராட்டப்பட்டார். இந்நிலையில் சில சர்ச்சைகள் எழுந்தது. தைரியமாக வந்து பேசி தீர்வு கண்டார்.

சமீபத்தில் அவர் ட்விட்டரில் மகளிர் தினம் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள்.

உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள் என தைரியமுடன் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News