DC பிடிச்சிருக்கா, அப்போ இந்த ஆக்ஷன் படங்களையும் பாருங்க!
ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களா நீங்க? உங்களுக்கு கண்டிப்பாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 'டிசி' படம் பிடிச்சிருக்கும்.
அப்படியே பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸ் பக்கம் போனீங்கன்னா, ரெண்டு தரமான ஆக்ஷன் படங்கள் இருக்கு. இதுவும் ரத்த ஆறு ஓடும் படங்கள் தான்.

நான் சொல்லப் போற ரெண்டுமே இந்தோனேசியன் படங்கள். 2018-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் 'தி நைட் கம்ஸ் ஃபார் அஸ்' (The Night Comes for Us). 2024-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் 'தி ஷேடோ ஸ்ட்ரேஸ்' (The Shadow Strays).

இந்த ரெண்டு படங்களையுமே இயக்கியது ஒரே இயக்குநர் தான். அவரோட பெயர் டிமோ த்ஜாஜான்டோ. ஒரே ஒரு குறைதான், தமிழ் டப்பிங் கிடையாது. அதுனால இங்கிலீஷ் சப்டைட்டிலோட பார்த்து என்ஜாய் பண்ணுங்க ரசிகர்களே...