அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை தயாரித்தவர் போனிகபூர் இவர் பிரபல முன்னாள் தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் கணவர். இவர், ஒரு ஹிந்தி பட தயாரிப்பாளர் ஆவார். தமிழில் முதல் முதலாக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமானார்.
பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து, அஜித்தின் 66-வது திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.
மேலும், அஜித் படங்களை தவிர்த்து மற்ற படங்களையும் இவர் தயாரித்து வருகிறார். அதில் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் ‘வீட்ல விசேஷங்க’ எனும் திரைப்படமும் உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள “நெஞ்சுக்கு நீதி” எனும் திரைப்படமும் ரெடியாகி வருகிறது.
இதில், நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முழு வேலைகளும் முடிந்து விட்டன. விரைவில், இப்படம் ரிலீஸ் பற்றி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. திரைப்படம் ஜனவரியில் வெளியாகி இருந்தால் இந்த நேரம் நெஞ்சில் திரைப்படமும் வெளியாகி இருக்கும். ஆனால், வலிமை ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதால் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்களேன்- எதையும் எதிர்பார்க்காதீங்க.! ஏமாந்து போய்டுவீங்க.! இவர் இப்படி சொல்லிட்டரே.!?
அதன்படி, வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அனேகமாக வலிமை திரைப்படத்தின் இடைவெளியில் ,நெஞ்சுக்கு நீதி, படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…