Categories: Cinema News latest news

படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்… இயக்குனரே கைவிட்ட ரஜினி படம்… ஆனால் அங்கதான் டிவிஸ்ட்டே!..

1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ராதா, நதியா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராஜாதி ராஜா”. இத்திரைப்படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியிருந்தார். இளையராஜாவின் மூத்த சகோதரரான பாஸ்கர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

Rajadhi Raja

இத்திரைப்படம் வெளிவந்தபோது மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இப்போதும் கூட இத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ரசித்துப் பார்ப்பவர்கள் பலர் உண்டு.

ஒரு இயக்குனர் இயக்கும் திரைப்படம் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு திருப்தியை அளிக்காமல் போனாலும் கூட அத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுவதும் உண்டு. ஆனால் “ராஜாதி ராஜா” திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் அப்படியே நேர்மாறாக நடந்தது என்று சொல்லலாம்.

R.Sundarrajan

அதாவது “ராஜாதி ராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு பின்னணி இசை சேர்க்காமல் அத்திரைப்படத்தை ரஜினிகாந்த், இளையராஜா, ஆர்.சுந்தர்ராஜன், கங்கை அமரன் ஆகிய மூவரும் திரையிட்டுப் பார்த்தனராம். படத்தை பார்த்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனுக்கு இத்திரைப்படம் நிச்சயமாக ஓடாது என்றே தோன்றியதாம். அதே போல் ரஜினிகாந்த்தும், கங்கை அமரனும் இத்திரைப்படம் நிச்சயமாக ஓடாது என்றே நினைத்தார்களாம்.

ஆனால் இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா? “இத்திரைப்படம் நிச்சயமாக ஓடும். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்” என அபார நம்பிக்கையுடன் கூறினாராம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!! என்னப்பா சொல்றீங்க??

Ilaiyaraaja

“ராஜாதி ராஜா” திரைப்படத்தை இயக்கிய ஆர்.சுந்தரராஜனுக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்த போது, இளையராஜா இத்திரைப்படத்தின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்தாராம். எனினும் இளையராஜா கூறியபடி “ராஜாதி ராஜா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad
Published by
Arun Prasad